» சினிமா » செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினியின் மியூசிக் சிங்கிள் வெளியீடு!

வியாழன் 17, மார்ச் 2022 5:31:31 PM (IST)



நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கிவுள்ள மியூசிக் சிங்கிளை மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்டுள்ளனர். 

இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.  ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. 

அதன்படி ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என பல கலைஞர்கள் பாடியுள்ளனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கிவுள்ள மியூசிக் சிங்கிளை மூன்று மொழி சூப்பர்ஸ்டார்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழில் பயணி சிங்கிளை ரஜினிகாந்தும், மலையாளத்தில் யாத்ராக்காரன் சிங்கிளை மோகன்லாலும், தெலுங்கில் சன்சாரி சிங்கிளை அல்லு அர்ஜூனும் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory