» சினிமா » செய்திகள்

மனைவியை விவகாரத்து செய்தார் இயக்குநர் பாலா!

செவ்வாய் 8, மார்ச் 2022 12:04:06 PM (IST)

சேது, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பாலா தனது மனைவியைப் பிரிந்தார். இருவருக்கும் மார்ச் 5ல் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாலா தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமலரை கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 5ல் திருமணம் செய்து கொண்டார். மதுரையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார். 17 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இணைந்திருந்த இத்தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இருவருமே விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று இருவருக்கும் சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

1999-ல் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் காவிய அந்தஸ்தைப் பெற்ற 'சேது' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றி பல ஆண்டுகளாக திரைத்துறையில் உரிய இடம் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்த நடிகர் விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு இயக்குநராக தேசிய அளவில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை தேடித்தந்தவர் ஒரு தயாரிப்பாளராக தரமான தமிழ்ப் படங்களை அளித்தவர், நடிகர்களின் சிறந்த நடிப்பைப் பெறும் ஜாலம் தெரிந்தவர், ரசிகர்களின் பெருமதிப்பைப் பெற்ற படைப்பாளி பாலா. அவருடைய திடீர் விவாகரத்து திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory