» சினிமா » செய்திகள்

கமல்ஹாசனின் விக்ரம் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் தேதி மார்ச் 14ல் அறிவிப்பு!

வியாழன் 3, மார்ச் 2022 5:17:09 PM (IST)



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 14ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

மாநகரம், கார்த்தி நடிப்பில் கைதி, விஜய் நடிப்பில் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ்  தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் 'விக்ரம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது,அதன்படி 'விக்ரம்'  படத்தின் ரிலீஸ் தேதி வருகிற மார்ச் 14ம் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory