» சினிமா » செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் : ரஜினி, கமல் வாழ்த்து!

செவ்வாய் 1, மார்ச் 2022 12:35:18 PM (IST)



தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினர், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஒ

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழக முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற பின்பு கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. இதையொட்டி திமுக கட்சியினர், தொண்டர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதையொட்டி தொண்டவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நான் முதல்வன் -உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதன்மூலம் மாணவர்களுக்கு கம்ப்யூட்டிங், மற்றும் ஜப்பான், சீனா, ரஷ்யா, பிரெஞ்ச் மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இன்றைய தினம் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் சந்திக்க உள்ளார். இன்று காலை முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் உள்ளிட்டவர்கள் நினைவிடங்களிலும் பெரியார் திடலில் பெரியார் நினைவிடத்திலும் நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட பணிகளை தொண்டர்கள் செய்து வருகின்றனர். அவருக்கு திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்களும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். இதுபோல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனும் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory