» சினிமா » செய்திகள்

காப்பகக் குழந்தைகளுக்காக வலிமை சிறப்புக் காட்சி: அஜித் ரசிகர்கள் ஏற்பாடு!

திங்கள் 28, பிப்ரவரி 2022 12:36:46 PM (IST)



புதுவையில் தனியார் காப்பகத்தில் உள்ள 150 குழந்தைகள் வலிமை திரைப்படத்தினை கண்டுகளிக்க அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர்.

புதுச்சேரியில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் 15 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனியார் ஹோமில் உள்ள 150 குழந்தைகளுக்கு நகரிலுள்ள திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக காலையில் திரையரங்கத்துக்கு ஆர்வமுடன் குழந்தைகள் வந்து காலை சிறப்பு காட்சியை பார்த்தனர். 

இதுகுறித்து அஜித் ரசிகர்கள் கூறும் போது "வலிமை படம் அறிமுக நிகழ்வை ஹோம் ஒன்றில் குழந்தைகளுக்கு முன்பாக நடத்தினோம். அப்போது அக்குழந்தைகள் திரையரங்கு சென்று படம் பார்க்க ஆசைப்பட்டனர். அவர்களுக்கு திரையரங்கம் செல்வது கனவாக இருந்தது. எனவே அக்குழந்தைகளை திரையரங்கு அழைத்து வர திட்டமிட்டமிட்டோம். எங்கள் குழுவில் இருந்த ஐடியில் பணிபுரியும் தர்ஷா இதற்கான முழு செலவையும் ஏற்பதாக தெரிவித்தார். திரையரங்கிலும் பேசி மொத்தமாக டிக்கெட் எடுத்தோம். மொத்தம் ரூ.18 ஆயிரம் செலவானது. அக்குழந்தைகளை படம் பார்க்க அழைத்து வந்து அவர்களின் சந்தோஷத்தில் பங்கேற்றோம்" என்று குறிப்பிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory