» சினிமா » செய்திகள்

சீன மொழியில் வெளியாகும் கனா திரைப்படம் - படக்குழுவினர் மகிழ்ச்சி

திங்கள் 28, பிப்ரவரி 2022 12:31:06 PM (IST)



சீன மொழியில் கனா திரைப்படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

பாடலாசிரியர், பாடகர், நடிகர் என அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அறிமுகமான படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழில் பெரிய வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் அளவுக்கு தெலுங்கு ரீமேக் வரவேற்பைப் பெறவில்லை. 

இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது. இந்நிலையில், சீனாவிலும் வெளியாகவுள்ளது கனா. சீன மொழியிலும் தங்களது படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் அனைவரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர். அங்கு மார்ச் 18-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா என்றால் அதிகப்படியான திரையரங்குகள் வெளியாகும். ஆகையால், அங்கும் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory