» சினிமா » செய்திகள்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வெற்றிக் கணக்கை துவங்கியது விஜய் மக்கள் இயக்கம்!

செவ்வாய் 22, பிப்ரவரி 2022 10:42:01 AM (IST)

புதுக்கோட்டை நகராட்சியில் 4 ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் பர்வேஸ் வெற்றி பெற்றிருக்கிறார். 

கடந்த 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் 4 ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் முகமது பர்வேஸ் வெற்றி பெற்றிருக்கிறார். 

முன்னதாக, கடந்த ஆண்டு நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் முதன்முறையாக தங்களது வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்கியது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 115 பேர் வெற்றிபெற்றனர். வெற்றி பெற்ற பிரதிநிதிகளை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும், யாருக்கும் ஆதரவு தராமால் தனித்து போட்டியிட்டது. வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கிய நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றிக்கணக்கை முகமது பர்வேஸ் தொடங்கியிருக்கிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory