» சினிமா » செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள் : மன்னிப்பு கேட்ட விஜய்!!

ஞாயிறு 20, பிப்ரவரி 2022 8:42:16 AM (IST)



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதையொட்டி நடிகர், நடிகைகள் பலரும் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குகளை பதிவு செய்தனர். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை காலை 7 மணிக்கு பதிவு செய்தார். வீட்டிலிருந்து அவர் காரில் வாக்குச்சாவடிக்கு புறப்பட்டார். அப்போது அவரது ரசிகர்கள் பலரும் பைக்குகளில் அவரது காரை பின்தொடர்ந்து வந்தனர். அவர் வாக்களிக்க வந்தபோதும், ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கூடியது. இதனால் வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அப்போது பொதுமக்களிடம் கைக்கூப்பி விஜய் மன்னிப்பு கேட்டார்.

நேற்று காலை 7 மணிக்கு நீலாங்கரையில் வாக்களிக்க விஜய் வந்தார். அப்போது சிவப்பு நிற காரில் கறுப்பு மாஸ்க் அணிந்து அவர் வந்தார். அவரை இப்படி பார்த்த பலரும் கறுப்பு சிவப்பு மேட்சிங் பற்றி பேசிக்கொண்டனர். காரணம், கடந்த சட்டசபை தேர்தலில் கறுப்பு சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்துதான் விஜய் ஓட்டு போட்டார். அதேபோல் இம்முறையும் கறுப்பு சிவப்பை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த தகவல், இணையதளத்தில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் இதை சமூக வலைத்தளங்கில் பரப்பி வருகின்றனர்.

தேனாம்பேட்டையில் திருவள்ளுவர் தெருவில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஓட்டு போட்டார். தி.நகரில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வாக்களித்தனர். டிரஸ்ட்புரத்தில் பாடலாசிரியர் வைரமுத்து ஓட்டு போட்டார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தி.நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் அருண் விஜய், ஈக்காட்டுதாங்கலிலும், மன்சூர் அலிகான் அரும்பாக்கத்திலும் ஆனந்தராஜ் நுங்கம்பாக்கத்திலும் வாக்களித்தனர்.நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, சத்யராஜ், சிம்பு, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வெளியூர்களில் இருப்பதால் வாக்களிக்க வரவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory