» சினிமா » செய்திகள்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வெளியீடு..!

சனி 12, பிப்ரவரி 2022 12:26:38 PM (IST)



விக்னேஷ் சிவன் இயக்கத்தி்ல் விஜய் சேதுபதி நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

நானும் ரவுடி தான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கண்மணியாக நடித்துள்ள நயன்தாரா மற்றும் கதிஜாவாக நடித்துள்ள சமந்தா என இரண்டு பேரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுக்கு இடையேயான பயணத்தை உணர்வுகளுடன் காமெடி, ரொமான்ஸ் கலந்து முக்கோண காதல் கதையாக படம் தயாராகி உள்ளது. இந்த படம் ஏப்.28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory