» சினிமா » செய்திகள்

ஆந்திராவில் பிரபல பாடகர் எல்.வி.ரேவந்த் திருமணம்

புதன் 9, பிப்ரவரி 2022 7:45:42 AM (IST)

பாகுபலி உட்பட பல திரைப்படங்களில் பாடிய பிரபல பாடகர் எல்.வி.ரேவந்த் திருமணம் ஆந்திராவில் எளியமுறையில் நடந்தது

தெலுங்கு உள்பட பல மொழிகளில் வெளியான பாகுபலி படத்தில் இடம்பெற்ற ‘மனோகரி’என்ற பாடலைப் பாடியிருந்தவர், எல்.வி.ரேவந்த். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா என்ற படத்திலும் பாடியுள்ளார். கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நிறைய பாடல்களைப் பாடியிருக்கும் எல்.வி.ரேவந்த், தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற படத்திலும் பாடியிருந்தார். அவருக்கும், அன்விதா என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடைய திருமணம் ஆந்திர மாநிலத்தில் எளியமுறையில் நடந்தது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory