» சினிமா » செய்திகள்

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த பீஸ்ட் படத்தின் முன்னோட்ட வீடியோ!!

செவ்வாய் 8, பிப்ரவரி 2022 11:37:38 AM (IST)



பீஸ்ட் பட பாடலின் முன்னோட்ட வீடியோவை வெளியான 24 மணி நேரத்திற்குள் சுமார் 6 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘பீஸ்ட்' திரைப்படத்தின் முதல் பாடல், காதலர் தினமான பிப்ரவரி 14ந்தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  அதனை தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலின் முன்னோட்ட வீடியோ நேற்று மாலை வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

நடிகர் விஜய் தொலைபேசி உரையாடல் உடன் வெளியான ‘அலமித்தி ஹபிபோ' என்ற அந்த பாடல் வீடியோவை இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமானோர் யூ-ட்யூப்பில்  கண்டு ரசித்துள்ளனர். மேலும், நடிகர் விஜய் ரசிகர்கள் இந்த பாடலின் முன்னோட்ட வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory