» சினிமா » செய்திகள்

அஜித்குமாரின் வலிமை திரைப்படம் பிப்.24ல் ரிலீஸ்!

புதன் 2, பிப்ரவரி 2022 12:15:06 PM (IST)

அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் 'வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ,திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் 'வலிமை' திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.இந்நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு ,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை ரத்து செய்து உள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ல் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory