» சினிமா » செய்திகள்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி - சூரி இணையும் படம்: இறுதி கட்டப் பணிகள் துவக்கம்!

செவ்வாய் 1, பிப்ரவரி 2022 3:16:10 PM (IST)



இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி - சூரி நடிக்கும் புதிய படத்தின் இறுதி கட்டப் பணிகள் துவங்கியது. 

இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மாநாடு படத்துக்கு பிறகு இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடக்க, நடிகர் சூரி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது துவங்கியது.  இந்த நிலையில் நிவின் பாலி, சூரி, இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் மிஷ்கின் இருக்கும் புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூரி, இன்று இனியதொரு தொடக்கம். இயக்குநர் அண்ணன் ராம், சகோதரர் நிவின் பாலியுடன் முதன்முறையாக பயணிப்பதில் மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.  நடிகர் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் ராமின் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு துவங்கியது. சூரியுடன் நடிக்கிறேன். ராம் இயக்கத்தில் நடிப்பது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory