» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் தேதி அறிவிப்பு

திங்கள் 31, ஜனவரி 2022 11:04:16 AM (IST)



சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள ‘டான்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டான்'. சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 

மேலும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், ஆர்ஜே விஜய், சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  கல்லூரி பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சில காட்சிகளில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் பள்ளி மாணவர்களாகவும் நடித்துள்ளனராம். இந்தப் படத்திலிருந்து ஜலபுலஜங்கு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாக கேட்கப்பட்டு வரும் நிலையில் ‘டான்’ திரைப்படம் மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory