» சினிமா » செய்திகள்

கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் ஜென்டில்மேன் 2 : இசையமைப்பாளர் ஒப்பந்தம்

திங்கள் 24, ஜனவரி 2022 10:46:21 AM (IST)

கே.டி.குஞ்சுமோன் தயாரிக்க உள்ள ‘ஜென்டில்மேன் 2’ படத்தின் இசையமைப்பாளராக எம்.எம்.கீரவாணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து 1993 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜென்டில்மேன்’. இப்படத்தில் மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். ஷங்கரின் முதல் படமான இதனை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஹ்மான் இசையில் பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கே.டி.குஞ்சுமோன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘ஜென்டில்மேன் 2’ படத்துக்கு இந்திய சினிமாவின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் ஒரு ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அவர் யாரென்று சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘பாகுபலி’ ‘நான் ஈ’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory