» சினிமா » செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு 8 திரைப்படங்கள் ரிலீஸ்!

செவ்வாய் 11, ஜனவரி 2022 4:15:25 PM (IST)

பொங்கல் பண்டிகையில் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா, சதீஷ் நடித்துள்ள நாய்சேகர் உட்பட 8 படங்கள் ரிலீஸ் ஆகிறது.

பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். அஜித்குமார் நடித்துள்ள வலிமை, விஷாலின் வீரமே வாகை சூடும், ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்து தமிழ், தெலுங்கில் தயாரான ஆர் ஆர் ஆர், பிரபாஸ் நடித்த ராதேஷியாம் ஆகிய படங்கள் பொங்கலுக்கு திரைக்குவர இருந்தன. இந்த படங்களுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கரோனா 3-வது அலை காரணமாக தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் இந்த 4 படங்களும் பொங்கலுக்கு வராமல் ரிலீசை தள்ளி வைத்துள்ளன. இது சிறுபட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

பொங்கல் பண்டிகையில் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா, விதார்த் நடித்துள்ள கார்பன், நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் நாய்சேகர், அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் என்ன சொல்ல போகிறாய், லட்சுமி மேனனின் ஏஜிபி, ராதிகா, விஜி சந்திரசேகர் நடித்துள்ள மருத, விஷ்னேஷின் பாசக்கார பய, ஆர்.பன்னீர் செல்வம் இயக்கிய ஐஸ்வர்யா முருகன் ஆகிய 8 படங்கள் திரைக்கு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory