» சினிமா » செய்திகள்

கரோனா 3வது அலையில் சிக்கிய சினிமா நட்சத்திரங்கள்!

சனி 8, ஜனவரி 2022 5:32:47 PM (IST)

கரோனா 3வது அலையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை மீனா மற்றும் அவரது குழந்தை நைனிகா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நடிகைகள் திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory