» சினிமா » செய்திகள்

பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் முடக்கம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

வெள்ளி 7, ஜனவரி 2022 12:20:59 PM (IST)

பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பலரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வந்தத்தில் யூடியூப் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சில நிபந்தனைகளைத் தாண்டி மிக எளிதாக எவர்  வேண்டுமானாலும் விடியோ எடுத்து பதிவு செய்யும் அமைப்பை கொண்டிருப்பதால் லட்சக்கணக்கான விடியோக்கள் யூடியூப்பில் இருக்கிறது.

மேலும், அதிக பார்வையாளர்களைக் கொண்டு தமிழிலும் நகைச்சுவை, அரசியல், சினிமா சார்ந்த பல சேனல்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் பிரபலமான நக்கலைட்ஸ், பரிதாபங்கள், சென்னை மீம்ஸ் போன்ற 15 யூடியூப் சானல்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory