» சினிமா » செய்திகள்
கரோனா கட்டுப்பாடுகள் எதிரொலி: அஜித்தின் வலிமை ரிலீஸ் தள்ளிவைப்பு!
வெள்ளி 7, ஜனவரி 2022 10:40:06 AM (IST)
பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
வலிமை படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால் தற்போது வலிமை படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியை போல முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் என் நண்பர் : கமல்ஹாசன் பேச்சு!
திங்கள் 16, மே 2022 12:14:13 PM (IST)

கேரளாவில் நடிகை மர்ம மரணம்: காதல் கணவர் கைது
சனி 14, மே 2022 5:31:01 PM (IST)

நடிகை சித்ரா வழக்கை திசை திருப்ப ஹேம்நாத் நாடகம்: பெற்றோர் குற்றச்சாட்டு!
சனி 14, மே 2022 4:17:56 PM (IST)

நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம்: பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
திங்கள் 9, மே 2022 11:46:05 AM (IST)

பாடல் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்தது ஏன் - பார்த்திபன் விளக்கம்
புதன் 4, மே 2022 5:46:59 PM (IST)

தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா? சுஹாசினியின் கருத்துக்கு அமீர் பதிலடி
புதன் 4, மே 2022 12:18:20 PM (IST)
