» சினிமா » செய்திகள்

மதுபான விளம்பரம்: சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!

செவ்வாய் 4, ஜனவரி 2022 5:36:29 PM (IST)

மதுபான விளம்பரத்தில் நடித்து நடிகை நிதி அகர்வால் சர்ச்சையில் சிக்கி உள்ளார். 

தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நிதி அகர்வால். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.  நிதி அகர்வால்   தற்போது மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்றும் பேசியும் வீடியோ வெளியிட்டு உள்ளார்.  அதில் இந்தியாவின் மிகச்சிறந்த பிராந்தியான மார்பியஸ் ஒரு மாஸ்டர் பீஸ். தற்போது ஒரு அழகான கோப்பையுடன் வருகிறது, இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு சிப்பையும் சிறந்த முறையில் சுவைக்கலாம். என குறிப்பிட்டுள்ளார்.இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory