» சினிமா » செய்திகள்

மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் இமான்!

புதன் 29, டிசம்பர் 2021 12:32:05 PM (IST)

இசையமைப்பாளர் டி.இமான் தானும் தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான். இவரது மனைவி மோனிகா ரிச்சர்ட். இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்து விட்டதாக இமான் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை. எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory