» சினிமா » செய்திகள்

இயக்குநர் சேதுமாதவன் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

வெள்ளி 24, டிசம்பர் 2021 12:13:15 PM (IST)

தன்னை மலையாள பட உலகில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சேதுமாதவன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. மலையாள இயக்குனரான இவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களையும் இயக்கியுள்ளார்.  நடிகர் கமல்ஹாசனை மலையாள திரைப்பட உலகில் அறிமுகப்படுத்திவர் 

இயக்குனர் கே.எஸ். சேதுமாதவன். நாளை நமதே உள்ளிட்ட 75 படங்களை இயக்கியுள்ளார். சிறந்த திரைப் படங்களை இயக்கியதற்காக தேசிய விருது, பிலிம் பேர் விருது, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.கே. எஸ். சேதுமாதவன் அவர்களின் உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலையாள பட இயக்குநர் சேதுமாதவன் மறைவுக்கு  மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory