» சினிமா » செய்திகள்

உலகளவில் முதலிடம்: மாஸ்டர் பாடல்கள் புதிய சாதனை!!

வியாழன் 23, டிசம்பர் 2021 3:43:26 PM (IST)



2020-ஆண்டில் உலகளவில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடல்களில் ’மாஸ்டர் ஆல்பம்’  முதலிடம் பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  2021- பொங்கல் அன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. பின் சமீபத்தில் இந்தியாவில் அதிகம் இணையத்தில் தேடப்பட்ட திரைப்படங்களில் 6-வது இடத்தைப் பெற்ற மாஸ்டர் தற்போது 2020-ஆண்டில் உலகளவில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடல்களில் ’மாஸ்டர் ஆல்பம்’  முதலிடம் பெற்று புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

இதை அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகக் கொண்டாடப்பட்டதுடன் யூடியூப்-ல் இதுவரை 30.5 கோடி பார்வைகளைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory