» சினிமா » செய்திகள்

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

புதன் 24, நவம்பர் 2021 4:51:49 PM (IST)

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்  விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் கமல்ஹாசன் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  கமல்ஹாசனின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory