» சினிமா » செய்திகள்

தேர்தலில் வெற்றி மன்றத்தினருக்கு விஜய் வாழ்த்து!

புதன் 27, அக்டோபர் 2021 11:47:33 AM (IST)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து விஜய் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார். 

ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்களோ என்னவோ தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில்  வெற்றி பெற்றனர். 

இந்தச் செய்தி விஜய் எட்டியவுடன் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து அவர்களின் வெற்றி விபரங்களைக் கண்காணித்துச் சொல்லக் கட்டளையிட்டார். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில் விஜய்யின் அலுவலகம் பரபரப்பானது. தொடர்ந்து வந்த தேர்தல் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து இறுதியாக 110  பேர் வெற்றி பெற்ற விபரம் வந்தவுடன் மக்கள் மன்றத்து ஆட்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பல நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை நேற்று அழைத்துப் பாராட்டியிருக்கிறார். வெற்றி பெற்ற குழுவினரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறார் விஜய்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory