» சினிமா » செய்திகள்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை பலி : மணிரத்னம் மீது வழக்குப்பதிவு

சனி 4, செப்டம்பர் 2021 4:13:13 PM (IST)

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை உயிரிழந்தது தொடர்பாக இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. வட மாநிலங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பிரபு, ஜெயராம், நாசர், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக தயாராகிறது. சரித்திர காலத்து படம் என்பதால் 80 குதிரைகளை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்துகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு குதிரைகளை வேனில் ஏற்றி படப்பிடிப்புக்கு கொண்டு சென்றபொது போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். 

பின்னர் குதிரைகளை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ள கடிதத்தை படக்குழுவினர் போலீசாரிடம் காட்டி மீட்டு சென்றார்கள். இந்தநிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஒரு குதிரை பலியாகி விட்டது. இதையடுத்து ஐதராபாத் அப்துல்லாபுட் போலீசார் மணிரத்னம் மற்றும் குதிரைகளின் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விலங்குகள் நல வாரியமும் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கலெக்டருக்கும், தெலுங்கானா விலங்குகள் நல வாரியத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory