» சினிமா » செய்திகள்

இளையராஜாவுடன் இணையும் இயக்குநர் பா.ரஞ்சித்?

வியாழன் 2, செப்டம்பர் 2021 4:22:58 PM (IST)

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவுள்ள படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. 70களின் இறுதியில் வட சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இதனையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் முழுக்க, முழுக்க காதல் கதை ஒன்றை  படமாக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு நட்சத்திரம் நகர்கிறது எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. தன் படத்துக்கு சந்தோஷ் நாராயணனை மட்டும் இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்த ரஞ்சித் ஒரு படத்துக்கு மட்டும் இளையராஜாவை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனது படத்துக்கு தொடர்ச்சியாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரை பயன்படுத்தி வந்த வெற்றிமாறன், விடுதலை படத்துக்காக இளையராஜாவுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory