» சினிமா » செய்திகள்

ஜெ. வாழ்க்கை வரலாறு : தலைவி ரிலீஸ் தேதி அறிவிப்பு

திங்கள் 23, ஆகஸ்ட் 2021 5:42:11 PM (IST)



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், திரையரங்குகள் மூடியிருந்ததால் வெளியீடு குறித்து எதுவும் திட்டமிடாமல் இருந்தது. இதற்கிடையே பல்வேறு ஓடிடி நிறுவனங்கள், பெரும் விலைக்கு நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்கு அணுகின. ஆனால், படக்குழுவினர் திரையரங்கில்தான் வெளியீடு என்பதில் உறுதியாக இருந்தார்கள். தற்போது தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 23) முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. செப்டம்பர் 10-ம் தேதி தலைவி திரைப்படம் வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாகவே, இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்திருப்பது நினைவுகூரத்தக்கது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தலைவி ஒரே நேரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory