» சினிமா » செய்திகள்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் நடிகர் விஜய் சேதுபதி திடீர் சந்திப்பு

வெள்ளி 20, ஆகஸ்ட் 2021 4:57:56 PM (IST)



புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கான அனுமதி கட்டணத்தை குறைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமியிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் வேகம் குறையத் தொடங்கி உள்லது.  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது புதுச்சேரி அரசு. அதனடிப்படையில் 100 பேர்களுடன் சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கான  படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக சினிமா மற்றும் சின்னத்திரைக்கான படப்படிப்புகள் நடந்து வருகின்றன.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக புதுச்சேரியில் முகாமிட்டுள்ளது.  புதுச்சேரியில் தங்கியிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி நேற்று மாலை  முதல்-அமைச்சர் ரங்கசாமியை கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். 

அந்த சந்திப்பில் படப்பிடிப்பிற்கான அனுமதி கட்டணம் குறைப்பது குறித்து அவர் கோரிக்கை வைத்தார். முன்னதாக, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கு ஒருநாள் கட்டணமாக ரூ. 5000 வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ரூ. 28,000 வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory