» சினிமா » செய்திகள்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி மறைவு: திரையுலகினர் இரங்கல்

திங்கள் 26, ஜூலை 2021 11:49:56 AM (IST)

தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். அவருக்கு வயது 76.

‘நீர்குமிழி’, ‘பாமாவிஜயம்’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட பல்வேறு திரைப் படங்களில் நடித்தவர் ஜெயந்தி. கமலா குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 60 மற்றும் 70களில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

கன்னட சினிமா ரசிகர்களால் ‘அபிநய சாரதா’ என்று அழைக்கப்படும் ஜெயந்தி இதுவரை சிறந்த நடிக்கைக்கான கன்னட அரசின் ஏழு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி இன்று (ஜூலை 26) காலை காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

விஜய் டிவியில் அக்.3 முதல் பிக்பாஸ் 5 ஆரம்பம்

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 12:35:24 PM (IST)

Sponsored Ads
Thoothukudi Business Directory