» சினிமா » செய்திகள்
பொன்வண்ணன் - சரண்யா மகள் திருமண விழா : முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
செவ்வாய் 6, ஜூலை 2021 5:19:20 PM (IST)
நட்சத்திரத் தம்பதி பொன்வண்ணன் - சரண்யா மகளின் திருமண வரவேற்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!
நடிகர் பொன்வண்ணன் - நடிகை சரண்யாவுக்கு ப்ரியதர்ஷினி, சாந்தினி என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் ப்ரியதர்ஷினி, விக்னேஷை நேற்று திருமணம் செய்துகொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டார்கள். மரக்கன்று பசுமைக்கூடையைப் பரிசாக வழங்கி மணமக்களை வாழ்த்தினார். திருமணப் புகைப்படங்களைப் நடிகை தேவதர்ஷினி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.