» சினிமா » செய்திகள்

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன் ?

புதன் 30, ஜூன் 2021 3:55:04 PM (IST)

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பரபரப்பான தேர்தலைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன், கைவசம் மூன்று படங்கள் இருக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் கமலின் இயக்கத்தில் தலைவன் இருக்கின்றான். இந்த மூன்று படங்களில் ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துவிட்டது. மீதிப் படப்பிடிப்பு முடிவதற்குள் இயக்குநருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையிலான சிக்கலால் படப்பிடிப்பு தடைபட்டு நிற்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு இசை அனிருத். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், அர்ஜுன் தாஸ், நரேன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் படத்தைத் தொடந்து, கமல் இயக்கி தயாரிக்க தலைவன் இருக்கின்றான் படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷம் 2 ரீமேக்காக பாபநாசம் 2 படத்தைத் தொடங்கும் திட்டத்திலும் இருந்தார் கமல். இந்த நிலையில், கமல்ஹாசனை இயக்க இளம் இயக்குநர் தயாராகிவருவதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகச் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  சூரி ஹீரோவாக நடிக்க உருவாகிவரும் விடுதலை படத்தினை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து இயக்கி வருகிறார் வெற்றி மாறன். இந்தப் படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்க தாணு தயாரிப்பில் வாடிவாசல் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் வெற்றி மாறன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசனை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory