» சினிமா » செய்திகள்

முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த நடிகர் அர்ஜுன்!

செவ்வாய் 29, ஜூன் 2021 5:32:37 PM (IST)



தமிழக முதல்வர் முக ஸ்டாலினை, பிரபல நடிகர் அர்ஜுன் நேரில் சந்தித்ததற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன், முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சந்தித்தார். அப்போது முதல்வரின் மனைவி துர்க்கா ஸ்டாலின் உடனிருந்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டது. ஆனால், நடிகர் அர்ஜுன் கோவில் ஒன்றை கட்டி இருப்பதாகவும், அந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு முதல்வர் முக ஸ்டாலினை அழைக்க வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் முதல்வர் - அர்ஜூன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory