» சினிமா » செய்திகள்

இளையராஜாவின் இசைக் கோவில்: ரஜினிகாந்த் புகழாரம்!!

புதன் 17, பிப்ரவரி 2021 5:34:18 PM (IST)இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் இளையராஜா ஸ்டுடியோ என்ற பெயரில் புதிய ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் இசைப்பணிகள் மூலமாக புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளைத் தொடங்கினார். அன்றைய தினம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில் நேற்று  நடிகர் ரஜினிகாந்த் இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்துள்ளார். பின்பு கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக இளையராஜாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினி. ஸ்டுடியோவிலும் இளையராஜாவுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டுச் சென்றுள்ளார். அதுபோல் இன்றும் மீண்டும் இளையராஜா ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஆச்சரியம் அளித்துள்ளார் ரஜினிகாந்த் . அங்கு நடக்கும் இசைப் பணிகளை அமர்ந்து பார்த்துள்ளார். அதன் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory