» சினிமா » செய்திகள்

சித்தி 2 தொடரிலிருந்து ராதிகா சரத்குமார் விலகல்!!

வெள்ளி 12, பிப்ரவரி 2021 11:54:45 AM (IST)சித்தி 2 தொடரிலிருந்து விலகுவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த சித்தி தொடர், 90களில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரின் 2-ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ஜெயலட்சுமி, காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்தத் தொடரை ராதிகாவின் ராடான் டிவி நிறுவனமே தயாரித்து வருகிறது. தற்போது இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: "மகிழ்ச்சியும் கொஞ்சம் சோகமும் கலந்த ஒரு மனநிலையில் இருக்கிறேன். சித்தி 2 மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். எனது சிறப்பான வருடங்களையும், கடின உழைப்பையும் சன் டிவியில் தந்திருக்கிறேன். அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், உடன் நடித்தவர்களிடமும் சோகத்துடன் விடை பெறுகிறேன். ஆனால், நிகழ்ச்சி தொடர வேண்டும். கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு வாழ்த்துகள். 

எனது ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கு என் அன்பு. நிபந்தனையில்லாத அன்புக்கும், விஸ்வாசத்துக்கும் நன்றி. தொடர்ந்து சித்தி 2வைப் பாருங்கள். எனது சிறந்த வெளிப்பாடு இனிமேல் தான் வரவுள்ளது". இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கணவர் சரத்குமாருடன் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால் அவர் தொடரில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

மக்கள்Feb 14, 2021 - 07:52:50 PM | Posted IP 49.37*****

இதனால் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் என கருதப்படுகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory