» சினிமா » செய்திகள்

போயஸ் கார்டனில் வீடுகட்டும் தனுஷ்: பூமி பூஜையில் ரஜினி!!

வியாழன் 11, பிப்ரவரி 2021 11:16:05 AM (IST)

போயஸ் கார்டனில் தனுஷ் கட்ட உள்ள வீட்டின் பூமி பூஜை விழாவில், நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் பங்கேற்றார்.

நடிகர் தனுஷ் சில மாதங்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் பல கோடிக்கு இடம் வாங்கி இருப்பதாகவும், அங்கு வீடு கட்ட இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் பரவி வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (10-ந் தேதி) காலை அங்கு பூமி பூஜை நடந்தது. இதில் தனுஷ் குடும்பத்துடன் கலந்து கொண்டார். ரஜினிகாந்தும் கொரோனா விதிமுறைகளுடன் முக கவசம் அணிந்து தனது மனைவி லதாவுடன் பூமி பூஜையில் பங்கேற்றார்.

ஐதராபாத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பின் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். இந்த வீட்டை விரைவில் கட்டி முடித்து குடும்பத்துடன் குடியேற தனுஷ் திட்டமிட்டு உள்ளார். பூமி பூஜை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய இரு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்தியில் அந்த்ரங்கி ரே படத்திலும் நடித்துள்ளார். அடுத்து அவெஞ்சர்ஸ் என்ட் கேம் இயக்குனர்கள் அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கத்தில் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory