» சினிமா » செய்திகள்

பவானி கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது: விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி புகழாரம்!

செவ்வாய் 9, பிப்ரவரி 2021 12:02:56 PM (IST)

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த பவானி கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள ‘உப்பென்னா’ என்கிற தெலுங்கு படம் வருகிற பிப்.12-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிரஞ்சீவி, விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது: "விஜய் சேதுபதி சிறந்த மனிதர். என்னோட நண்பன். கதாபாத்திரங்களின் வலிமையையும், தன்மையும் உணர்ந்து நடிப்பவர். ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அவர் என்றைக்குமே பிடிவாதம் பிடித்ததில்லை. அண்மையில் மாஸ்டர் படம் பார்த்தேன். அதில் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது” என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory