» சினிமா » செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பவில்லை: கரோனா பாதிப்பு குறித்து நடிகர் சூர்யா கருத்து!

திங்கள் 8, பிப்ரவரி 2021 11:38:38 AM (IST)

கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா, தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் கரோனா பெரும் பாதிப்பையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது. சமீப காலத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதை சுகாதாரத்துறைத் தெரிவித்து வந்த நிலையில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்திருப்பதால் ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.


இதுதொடர்பாக நடிகர் சூர்யா தனது டுவிட்டரில், "கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என்று பதிவிட்டுள்ளார். 

கரோனா தொற்றுக்கு பிரபலங்களும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நடிகர் சரத்குமார், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ராஜமெளலி, ப்ருத்விராஜ், ராம் சரண் தேஜா உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதோடு, சூர்யாவின் தந்தையும், மூத்த நடிகருமான சிவகுமாருக்கு கடந்த வருட நவம்பர் இறுதியில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதும் நினைவுக்கூறத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory