» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்: முன்னாள் கேப்டன் நம்பிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:26:06 PM (IST)
சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரேமி ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பல ஜாம்பவான்களைக் கொண்ட அணியான தென்னாப்பிரிக்கா பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. மேலும், ஆடவர், மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இறுதி வரை வந்து தோல்வியைத் தழுவியது. மேலும், 19 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியிலும் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது. இதுகுறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேமி ஸ்மித் கூறுகையில், "தென்னாப்பிரிக்காவின் நீண்டகால ஐஐசி கோப்பைக்கான தாகம், 2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னரே முடிவுக்கு வரவுள்ளது.
2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் விளையாடவிருக்கிறது. தற்போதைய சூழலில் கிரிக்கெட் சாதாரணமாக இருக்காது. அதனால், நீங்க செய்யவேண்டிய செய்துகொள்ளலாம்.
தென்னாப்பிரிக்கா தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. டி20 கிரிக்கெட் இன்னும் வளரவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். இது அமெரிக்கா வரை பரவியிருப்பதை நாம் காண்கிறோம். கூடிய விரைவில் ஒலிம்பிக்கில் பார்க்க விருக்கிறோம்.
இந்திய கிரிக்கெட் அணி அடிக்கடி வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மற்ற நாடுகளுக்கு வருவாய் வழங்குவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்க நாடுகளுடனோ அல்லது பிற நாடுகளுடனோ ஈடுபடாமல் ஒருவருக்கொருவர் மட்டுமே விளையாடினால், டெஸ்ட் கிரிக்கெட் வணிக ரீதியாக கடினமாகிவிடும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் ப்ரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்!
ஞாயிறு 16, மார்ச் 2025 4:53:19 PM (IST)

உலக கோப்பை தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது: வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி தகவல்!
சனி 15, மார்ச் 2025 3:25:02 PM (IST)

ஐபிஎல்: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமன
வெள்ளி 14, மார்ச் 2025 11:50:46 AM (IST)

ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிப்பு: பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராகவும் தேர்வு!
வியாழன் 13, மார்ச் 2025 8:04:21 PM (IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா தகுதி பெறாததால் ரூ. 45 கோடி இழப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 11:49:49 AM (IST)

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’!
திங்கள் 10, மார்ச் 2025 9:02:16 AM (IST)
