» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ரஷித் கான் உலக சாதனை
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:49:08 PM (IST)
டி20 கிரிக்கெட்டில் 633 விக்கெட்களை கைப்பற்றிய ரஷித் கான் உலக சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று (குவாலிபயர் 1) ஆட்டத்தில் எம்.ஜ. கேப்டவுன் அணி பார்ல் ராயல்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இதில் கேப்டவுன் அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.இதையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (சர்வதேச, லீக், உள்ளூர் போட்டி உள்பட) அவரது விக்கெட் எண்ணிக்கை 633-ஆக உயர்ந்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வெய்ன் பிராவோ 631 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முந்தி ரஷித் கான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்சர் படேலின் மேஜிக் கேட்ச்கள்; இங்கிலாந்தை முடக்கிய பும்ரா - இந்திய அணி வெற்றிப் பாதை!
வெள்ளி 6, மார்ச் 2026 11:43:18 AM (IST)

டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
வியாழன் 5, மார்ச் 2026 10:59:50 AM (IST)

ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:57:09 PM (IST)

நாக் அவுட் போட்டிகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளுங்கள்: இந்திய அணிக்கு மெக்ரா அறிவுரை!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:34:58 PM (IST)

டி20 உலகக் கோப்பை: சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் - அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
திங்கள் 2, மார்ச் 2026 10:24:57 AM (IST)

ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்தியா: 256 ரன்கள் குவித்து அபார வெற்றி!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 10:41:35 AM (IST)









