» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தமிழக வீரர்கள்!
வியாழன் 24, அக்டோபர் 2024 4:59:22 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்து. வாஷிங்டன் சுந்தர் 7, மற்றும் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோருக்கு பதிலாக கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி மொத்தமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. அந்த அணியின் 10 விக்கெட்டுகளையும் சுந்தர் (7) மற்றும் அஸ்வின் (3) வீழ்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)
