» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜிம்பாப்வே தொடர் : இந்திய அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு!
செவ்வாய் 2, ஜூலை 2024 4:10:29 PM (IST)
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில், தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம்பெற்றுள்ளார்.

ஆனால் தற்போது அவர்கள் 3பேரும் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் t20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படாசில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய வீரர்களுக்கு பார்படாசில் உள்ள ஹோட்டலில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
இதனால் இந்த அணியில் இருக்கும் சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் தற்போது ஜிம்பாப்வேக்கு வரமுடியாத சூழலில் இருக்கிறார்கள். இந்த சூழலில் இந்தியா, ஜிம்பாப்வே தொடர் வரும் ஆறாம் தேதி ஹராரேவில் தொடங்குகிறது. இதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் இந்த மூன்று வீரர்களும் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
சிஎஸ்கே அணிக்கு எதிராக எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை படைத்த சுப்மன் கில் - சாய் சுதர்ஷன் சிஎஸ்கே அணிக்கு எதிராக எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை படைத்த சுப்மன் கில் - சாய் சுதர்ஷன் மேலும் இந்தியாவில் உலகக்கோப்பை வென்ற வீரர்களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற இருக்கிறது. இதற்கு இந்த மூன்று வீரர்களும் நிச்சயம் இடம்பெற வேண்டும். இதன் காரணமாக தான் பிசிசிஐ தற்போது இந்த மாற்று ஏற்பாடு செய்திருக்கிறது. இதன்படி தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனுக்கு ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சாய் சுதர்சன் தொடக்க வீரராக சிறப்பாக ஐபிஎல் தொடரில் செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று விக்கெட் கீப்பர் ஜித்தேஸ் சர்மா மற்றும் வேக பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோருக்கும் ஜிம்பாப்வே தொடரில் மாற்று வீரர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தொடருக்கு தமிழக வீரர் முதலில் பரிந்துரை செய்யப்படாத நிலையில் தற்போது மீண்டும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடை செய்திருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா உலக சாம்பியன்: கேப்டன் டெம்பா பவுமா சாதனை!
ஞாயிறு 15, ஜூன் 2025 11:25:04 AM (IST)

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: டிராபி பெயரை மாற்ற பிசிசிஐ எதிர்ப்பு?
சனி 14, ஜூன் 2025 5:25:42 PM (IST)

ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் தோனி: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!!
செவ்வாய் 10, ஜூன் 2025 5:24:10 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நிக்கோலஸ் பூரன் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
செவ்வாய் 10, ஜூன் 2025 11:00:02 AM (IST)

சென்னை, பெங்களூரு மைதானங்களில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் மாற்றம்: பி.சி.சி.ஐ.
திங்கள் 9, ஜூன் 2025 5:15:03 PM (IST)

இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸை நியமிக்க திட்டம்?
திங்கள் 9, ஜூன் 2025 5:04:11 PM (IST)
