» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இன்டீஸ்!

சனி 22, ஜூன் 2024 11:19:05 AM (IST)டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணி வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் 128க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் அணி 10.5 ஓவர்களில் 130/1 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மே.இ.தீ. அணி சார்பில் ரஸ்ஸெல்,ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பேட்டிங்கில் தொடக்க வீரர் சாய் ஹோப் 39 பந்துகளில் 82 ரன்கள் அடித்து அசத்தினார்.

நிகோலஸ் பூரண் 27 ரன்கள் அடித்தார். ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேஸ்ஸுக்கு தரப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுகிறது. வெஸ்ட் இன்டீஸ் அணி அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory