» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஜூலை 5-ஆம் தேதி தொடக்கம்

சனி 15, ஜூன் 2024 5:53:32 PM (IST)

8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. லீக் போட்டிகள் ஜூலை 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சேலத்திலும், ஜூலை 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கோவையிலும், ஜூலை 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நெல்லையிலும், ஜூலை 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை திண்டுக்கல்லிலும் நடைபெற உள்ளன.

குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் ஜூலை 30 மற்றும் 31-ஆம் தேதி திண்டுக்கலில் நடக்கிறது. 2-வது குவாலிபையர் மற்றும் இறுதிப்போட்டிகள் ஆகஸ்டு 2 மற்றும் 4-ஆம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.இரவு 7.15 மணிக்கு போட்டிகள் தொடங்கும். இரண்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் மதியம் 3.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory