» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: 19 பந்துகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து உலக சாதனை!

வெள்ளி 14, ஜூன் 2024 12:23:36 PM (IST)டி20 உலகக் கோப்பை போட்டியில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் 19 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டி இங்கிலாந்து உலக சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் 28ஆவது போட்டியில் ஓமன் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய ஓமன் அணி 13.2 ஓவரில் 47 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஆடில் ரஷித் 4, மார்க் வுட் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 19 பந்துகளில் 50/2 ரன்கள் எடுத்து போட்டியை முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. சால்ட் 12 ரன்கள், கேப்டன் ஜாஸ் பட்லர் 24 ரன்கள்*, வில் ஜாக்ஸ் 5, ஜானி பெயர்ஸ்டோ 8* ரன்கள் எடுத்தார்கள்.

இதன் மூலம் குரூப் பி புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு ரன் ரேட் +3.081 ஆக மாறியுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற ஸ்காட்லாந்து அணி தோற்க வேண்டும், அடுத்த போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற வேண்டும்.

இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு ஸ்காட்லாந்துவிடம் இருக்கிறது. ஒருவேளை ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் இங்கிலாந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறும். ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவுடன் சனிக்கிழமை மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பையில் அதிகமான பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணிகள்:

101 பந்துகள் - இங்கிலாந்து 2024

90 பந்துகள் - இலங்கை 2014

86 பந்துகள் - ஆஸ்திரேலிய 2024

82 பந்துகள் - ஆஸ்திரேலியா 2021

81 பந்துகள் - இந்தியா


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory