» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாபர், ரிஸ்வான் அசத்தல்: நியூஸி.யை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

புதன் 9, நவம்பர் 2022 5:22:12 PM (IST)



டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. 

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை அந்த அணி எடுத்தது. ஃபின் ஆலன், டெவான் கான்வே மற்றும் கிளென் பிலிப்ஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் வெளியேறி இருந்தனர். கேப்டன் வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். மறுபக்கம் மிட்செல், 35 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். கடந்த 2021 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் அவர் அரைசதம் விளாசி இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நவாஸ் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே நேர்த்தியாக ரன்களை விரட்டியது. முதல் விக்கெட்டிற்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானும் 122 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். போல்ட், சவுதி, ஃபெர்குசன், சான்ட்னர், சோதி போன்ற நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சு இந்த போட்டியில் கைகொடுக்கவில்லை. 

பாபர் 42 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஸ்வான், 43 பந்துகளில் 57 ரன்களை எடுத்து அவுட்டானார். முகமது ஹாரிஸ், 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் ஷான் மசூத், 3 ரன்கள் எடுத்தார். இஃப்திகார் ரன் ஏதும் எடுக்கவில்லை. 19.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது பாகிஸ்தான். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 2 விக்கெட்டும், சான்ட்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். ஆட்ட நாயகனாக முகம்மது ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory