» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூரியகுமார் யாதவ் அதிரடி அரைசதம்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

திங்கள் 7, நவம்பர் 2022 10:35:32 AM (IST)



சூரியகுமார் யாதவ் அதிரடி அரைசதம் காரணமாக ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி டி20 உலக கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியது. 

உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று 2வது பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின.இந்தியா ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டதால், சம்பிரதாயமாக நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது.  கே.எல்.ராகுல் 51 ரன் (35 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரோகித் 15, விராத் 26, பன்ட் 3, ஹர்திக் 18 ரன்னில் ஆட்டமிழந்தனர். சூரியகுமார் யாதவ் 61 ரன் (25 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), அக்சர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  

ஜிம்பாப்வே பந்துவீச்சில் ஷான் வில்லியம்ஸ் 2, சிக்கந்தர், முஸரபானி, என்காரவா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே 17.2 ஓவரில் 115 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பர்ல் 35 ரன் (22 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), சிக்கந்தர் 34 ரன் (24 பந்து, 3 பவுண்டரி) எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 3, ஹர்திக், ஷமி தலா 2, புவி, அர்ஷ்தீப், அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

சூரியகுமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 71 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2வது பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. சூப்பர் 12 சுற்றில் 4 வெற்றிகளைப் பெற்ற ஒரே அணி இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory