» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்திடம் வங்கதேச அணி அதிர்ச்சி தோல்வி!

திங்கள் 18, அக்டோபர் 2021 4:34:11 PM (IST)



டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்திடம் வங்கதேச அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. 

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

இந்நிலையில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியைத் தோற்கடித்தது ஸ்காட்லாந்து.  முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்தது பற்றி வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியதாவது: ஆடுகளம் நன்றாக இருந்தது. 140 ரன்களை எடுத்திருக்க முடியும். நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய ஒரு பெரிய ஓவர் எங்களுக்கு அமையவில்லை. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஆனால் பேட்டிங் குழு சரியாக விளையாடவில்லை. ஸ்காட்லாந்து அணியை 53/6 என்கிற நிலைக்குக் கொண்டு சென்ற பிறகு நாங்கள் ஆர்வத்தை இழக்கவில்லை. ஒரு விக்கெட் எடுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஸ்காட்லாந்து பேட்டர்கள் சிறப்பாக விளையாடி அந்த ஸ்கோரை எடுத்தார்கள். 140 ரன்களை விரட்ட முடியவில்லையென்றால் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய வேண்டும். அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory