» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் : மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது!!

சனி 24, ஜூலை 2021 4:17:58 PM (IST)டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்த மீராபாய் சானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது. இந்நிலையில், இந்தியா தனது பதக்க வேட்டையை இன்று (சனிக்கிழமை) தொடங்கியுள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பதக்கத்தை வென்றுள்ளது. 49 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு வெற்றிபெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார்.

26 வயதான மீராபாய் சானு மொத்தமாக, 202 கிலோ எடையை தூக்கி சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி படைத்த சாதனையை முறியடித்துள்ளார். சீனாவின் ஹூ சிஉய் தங்க பதக்கத்தையும் இந்தோனேசியாவின் ஐசா விண்டி கான்டிகா வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளர். இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய் சானுவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும்  பிரதமர் நரேந்திர மோடி, தமிழகமுதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory