» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காயல் பிரிமியர் லீக்: ஸ்பீடு ஸ்டைகர்ஸ் அணி சாம்பியன்

செவ்வாய் 13, ஜூலை 2021 11:47:28 AM (IST)



வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2021 சாம்பியன் பட்டத்தை ஸ்பீடு ஸ்டைகர்ஸ் அணியினர் பெற்றனர்!

காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதயர் கல்லூரி மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் அகடமியின் சார்பாக 13-வது ஆண்டு காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றுவந்தது.

இந்த போட்டியில் ஸ்பீடு ஸ்டைகர்ஸ், ஹைச் கே டிராகன்ஸ், காயல் மான்செஸ்டர், நைட் ரைடர்ஸ், சிங்கை கிங்ஸ், காயல் எக்ஸ்பிரஸ், காயல் அர்ஸனல், ஃபை ஸ்கை ஸ்போர்டிங், காயல் செல்ஸி, நியூ யார்க் ரேஞ்சர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்றன, இதில் நகரின் தலைசிறந்த வீரர்கள் விளையாடினார்கள். முதல் சுற்றுபோட்டி லீக் முறையிலும் பின்னர் நாக்கவுட் முறையிலும் நடத்தப்பட்டது.

இதன் இறுதிப்போட்டி கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஸ்பீடு ஸ்டைகர் அணியும், ஹைச் கே டிராகன்ஸ் அணியும் விளையாடியது. ஆட்டநேரம் முழுவதும் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால், சமநிலை முறிவுமுறை கடைபிடிக்கப்பட்டது. அதில் ஸ்பீடு ஸ்டைகர்ஸ் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

தொடந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு வாவு செய்யது அப்துர் ரஹ்மான் ஹாஜி தலைமை தாங்கினார், எம் என் உவைஸ் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் தொகுயின் சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறையின் அமைச்சருமான அனிதா ஆர் இராதாகிருஷ்ணனின் மகன் ஆனந்த மகேஷ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பரிசளிப்பு விழாவின் துவக்கமாக இறைமறையை ஹாஃபிழ் பிஸ்தாமி ரிஃபாய் ஓதினார், அதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. வரவேற்புரையை சகோ அலாவுதீனும், அறிமுகவுரையை சகோ. ஜஹாங்கிர் ஆகியோர் நிகழ்த்தினார்கள். பரிசளிப்பின் ஆரம்பமாக நடுவர்களுக்கும், மைதான பராமரிப்பில் ஈடுபட்ட தன்னர்வளர்களுக்கும் பரிசுகளை எம் என் உவைஸ், ஏ எஸ் ஜமால் மற்றும் சுகு ஆகியோர்கள் வழங்கினார்கள்.

போட்டித்தொடரின் சிறந்த கோல்கீப்பராக ஹைச் கே டிராகன்ஸ் அணியின் சாமு, சிறந்த டிஃபன்டராக காயல் மான்ஸெஸ்டர் அணியின் அப்துல்லாஹ், சிறந்த மிட்ஃபீல்டராக ஸ்பீடு ஸ்டைகர் அணியின் காஜா, அதிக கோல் அடித்த வீரராக ஸ்பீடு ஸ்டைகர் அணியின் ஜாஃபர், சிறந்த ஃபார்வடு வீரராக நைட் ரைடர்ஸ் அணியின் ஹாரிஸ் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த விருதுகளை ஹாஜி எஸ் எம் ரஃபீ, இராமஜெயம் வாவு எம் எம் மொஹூதஜிம், வாவு எஸ் ஏ ஆர் அஹமது இஸ்ஹாக், சாளை ஷேக் சலீம் மற்றும் முத்து ஆலிம் ஆகியோர் வழங்கினார்கள்.

வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்குமுனைந்த அணி வீரர்களுக்கு தனிநபர் பரிசுகளை எம் என் உவைஸ் அவர்களும், ஹாஜி பி எஸ் எம் இல்யாஸ் அவர்களும் வழங்கினார்கள். வெற்றிக்கு முனைந்த அணியினருக்கு ரூ.15 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கோப்பையை வாவு வஜீஹா வனிதயர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர் ரஹ்மான் அவர்கள் வழங்கினார்கள்.

வெற்றிபெற்ற அணியினருக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கோப்பையை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணனின் மகன் ஆனந்த மகேஷ்வரன் வழங்கினார். நன்றியுரையை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஹாஃபிழ் மஹ்மூது சுல்தான் நிகழ்த்தினார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வீ-யூனைடெட் நிறுவனர் அலி ஃபைஸல் வழிகாட்டுதலின்படி அகடமி வீரர்கள் செய்திருந்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory